அவள் தாயை விட அவளை அதிகநாள் சுமந்தவன் நான் ! (ஒவ்வாருவருக்கும் )
அழியாத துக்கத்தை அள்ளி கொடுத்தவள் அவள்
மார்புக்குள் இருக்கும் என் இதயத்தை
என் மனதுக்குள் இருந்தவாறே கசக்கி
பிழிந்தவள் அவள் !
என்னை நெருங்கி வந்த எமன் கூட
தள்ளி நிற்கிறான்,
அவனை விட அவள் உருவாக்கும்
மரண வலி அதிகம் என்பதால் !
யாரிடமும் நான் சிரித்தது பேசுவதில்லை,
என் சிரிப்பை அவள் நினைவுகளுக்குள்
அடக்கம் செய்து விட்டாள் !
என் உடம்பின் ரத்தத்தின் அளவும்
குறைந்து விட்டது,
இறந்துபோன பிணத்திற்கு எதற்கு இரத்தம் ?
என் ஐம்புலன்களும் உணர்வை இழந்தன
என் உயிர் ( அவள் ) என்னை விட்டு பிரிந்ததால் !
என் இதயம் கூட உயிர் பிரியும் சமயத்தில்
கூலி கேட்கிறதே, அவளை சுமந்ததற்காக !
என் மூளையும் சுருங்கி விரிகின்றது
அவள் நினைவுகள் உண்டாக்கும் அழுத்தத்தால் !
எனக்கு உயிரை கொடுத்த ஆண்டவன்
இன்று உறக்கத்தில் !
மரணத்தை நோக்கி,மரண படுக்கையில் நான்
அவளோ இன்னொருவன் காதலியாக !
நான் இரக்கும் போதும் அவள் நினைவுகள் என் நெஞ்சில் இருக்கும் !
அவள் என்னை வெறுத்த பின்னும்
நான் ஏன் அவளை நேசிக்கிறேன் !
ஏனென்றால்?
அவள் தாயை விட அவளை அதிகநாள் சுமந்தவன் நான் !
காதலுக்காக உயிரைவிட்ட ஒவ்வொரு ஆணுக்கும்
இக்கவிதை ஓர் சமர்ப்பணம் !
அன்புடன்
அரவிந்த் _ என் அஞ்சலிக்காக