சேமித்துவிடு !
மனிதா ....
நான் மண்ணில் பிறந்து
உன்னில் கலந்து
உன்னை சேமிக்க வந்தவன் ,
நீயோ... என்னை
தேவையில்லாமல்
மண்ணில் ஊற்றி
உன் ஊரையும் வற்றவைக்கிறாய்..!
நான்...
மழை நீராய் வந்தாலும் வீணடிக்கிறாய்
குடிநீரை வந்தாலும் வீணடிக்கிறாய் .!
நான்
மண்ணுக்குள் சென்றால் மரத்திற்கு உயிராவேன்,
கடலோடு கலந்தாலும் அதிலிருக்கும்
உயிரினத்திற்கும் உயிராவேன் ! எனவே
என் தேவையை உணர்ந்துவிடு
உன்னை சேமிக்க
என்னை எப்போதும் சேமித்துவிடு !
- இப்படிக்கு தண்ணீர்