குழந்தை விளையாட்டு.!.பொள்ளாச்சி அபி

“எப்பப் பாத்தாலும்
உன்னைப் படிக்கச்
சொல்ல மாட்டேன்.!
உனக்குத் தெரியாமே
டிரஸ் அழுக்காயிட்டா
உன்னை திட்டமாட்டேன்.
நீ ஸ்கூல்லேருந்து
வந்தவுடன் டெஸ்ட்
பேப்பரைக் காட்டுன்னு
கேக்கமாட்டேன்..!
இன்னும் என்னடி
விளையாட்டுன்னு.?
ஆறுமணிக்கே நான்
மிரட்டமாட்டேன்..!”
பொம்மைகளோடு விளையாடும்
என் குழந்தை.,
பெரியவர்கள் எப்படி
நடந்து கொள்ளவேண்டுமென
கற்றுக் கொடுக்கிறது.!