காதல் போதையில்
என்ன அதிசயம் என் இதயம் களவு போய்விட்டது
தேடினேன் தேடினேன் கிடைக்க பெறவில்லை
முககண்ணை கேட்டேன் பதில் இல்லை
மனகண்ணை கேட்டதும் ஒரு பெண் என்றது
விழிப்புடன் நான் இல்லை என்பது செவிவழிசெய்தி
இனி என்ன செய்வது என்று வினவியபோது
வழக்கு உரைக்கலாம் என்றது மூளை
அனால் இதயமோ அந்த பெண்ணிடமே இதை
பற்றி கேட்கிறேன் என்று
பெண்ணே கொடுத்து விடு.........
என்னை அல்ல
பதிலாக உன் இதயத்தை