இப்படிக்கு- 2011
இன்னொரு ஜென்மம்
எனக்கில்லை- இருந்தால்
அது சாத்தியமில்லை,
ஒரு கனம் வலிக்கிறது
கண்ணிர் வர
துடிக்கிறது - உங்களை
விட்டு பிரிகிறேன் என்று.
எத்தனையோ தமிழர்களை
இழந்து விட்டேன்- இருந்தாலும்
நினைவுக்குரியவன் ஆகிவிட்டேன்,
எத்தனையோ கனவுகளை
பார்த்து விட்டேன்-கிடைக்காத
விருதுகளை கண்டுவிட்டேன்,
என் காலத்தை-கல்வெட்டில்
செதுக்கி வையுங்கள்,
இல்லை என்றால்- கல்லறையில்
ஆவது செதுக்கி வையுங்கள்.
என்றாவது
ஒரு தலைமுறை
என்னை பார்க்கட்டும்
இப்படிக்கு கண்ணீரோடு- 2011