லட்சியம்

கருவறையில் துயிலும் போது
உருவாயிருக்க வேண்டும் !

தொப்புள்கொடி அறுத்த நொடியில்
தோன்றியிருக்க வேண்டும் !

தாய்பாலே உணவாகும் போது
உணர்திருக்க வேண்டும் !

சுயமாய் நடைபழகும் போது
சிந்தித்திருக்க வேண்டும் !

கல்வி ஆதாரமாகும் போது
கண் மலர்ந்திருக்க வேண்டும் !

காதலை காதலிக்கும் போது
நினைதிருக்க வேண்டும் !

முடிச்சி முன்று போடும்போது
முடிவு பண்ணியிருக்க வேண்டும் !

தருணங்கள் இத்தனையும் தவறவிட்டு
தலை மேல் கைவைத்து
தலைவிதி என்று அழுவாத !

எதிர்கால லட்சியம் இன்றி
ஜடமாய் வாழ்வதா ?

பிறவியின் பயனை என்றாவது
ஒரு நாள் எண்ணி பார்த்துண்டா ?

வரும் நாளை எதிர்பார்த்து
இந்நாளை வீண் செய்வதா ?

இது பொழுது போக்கி
பழுது பார்க்கும் பிறவியில்லை !

லட்சியம் கொண்டு
தோல்வியை வெல்லும் பிறவி

நண்பனே லட்சியம் கொள் - அதுவே
உன் வாழ்வின் ஊன்றுகோல்..........

எழுதியவர் : கவிஞர் : ஜெ.மகேஷ் (25-Feb-12, 2:47 pm)
பார்வை : 6299

மேலே