மனதோடு நான் மாலை நிலவோடு நீ

மனதோடு நான் நின்றேன்
மாலை நிலவோடு நீ வந்தாய்
விழியோடு காதல் சொன்னாய்
இதழோடு நீ சிரித்தாய்
நினைவோடு நீ நடந்தாய்
கனவோடும் வந்து உறவாடினாய்
மலரோடு ஒரு நாள் நான் வந்தபோது
உந்தன் மனதோடு நான் இல்லை
என்னை நீ மறந்து விடு என்றாய்
விழியோடும் கண்ணீரோடு நான்
இன்னொருவன் கையோடு கைசேர்த்து நீ
உறவாடும் உள்ளத்தில் ஒன்று பொய்யானால்
காதல் தேரோடுமோ இங்கே
மன வீதியில்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (27-Feb-12, 12:06 am)
பார்வை : 251

மேலே