அத்தனை அன்பா?.....

பட்டு ரோஜாவை விட
சிவந்த உன் இதழ்கள்
சுடு நீர் பட்டு விட்டது போல
துடிப்பது ஏன்?
மெல்லிய தென்றலுக்கும்
துவண்டு விடும்
உன் கன்னம்
வாடி போய் தெரிவது ஏன்?
சின்ன ஒரு தூசி கூட
படாமல் உன்
கரு வண்டு கண்கள்
செக்கச் சிவந்து கலங்குவது ஏன்?
அப்படி நான் என்ன சொன்னேன்?
நாளை ஒரு நாள்
உன்னை பார்க்க
வர நேரமில்லை என்றுதானே
சொன்னேன்.....
அதற்கு வார்த்தையே இல்லாமல்
இத்தனை அபிநயமா?
அத்தனை அன்பா
என் மீது உனக்கு?.....