கண்ணாடி

நான் சிரிக்க,
நீயும் சிரிக்கிறாய்!
நான் அழ,
நீயும் அழுகிறாய்!

என் கோபம்,
உனக்கும் கோபம்!
என் கவலை,
உனக்கும் கவலை!
புரிந்துகொண்டேன்..!

எனக்கு பிடித்ததை
பிறருக்கு கொடுக்க வேண்டுமென,
என் சிரிப்பை
எனக்கு காட்டிய
கண்ணாடியே!

உள்ளதை காட்டினாய்..!
உள்ளத்தையும் காட்டினாய்..!

நீயே என்னை வாசித்து
என்னை யோசிக்க வைக்கும்
விமர்சகன்..!

பலமுறை பார்த்தேன்..
எப்போது பார்த்தாலும்
நீ என்னிடம்
ஒரே மாதிரியாகத்தான்
இருக்கிறாய்..!!
நிமிடத்திற்கு நிமிடம்
குணம் மாறும்
மனிதனை விட
நீயே உயர்ந்தவன்..!

அரசியல்வாதியை விட
நீயே நேர்மையானவன்!
எப்போதும்
உண்மையை மட்டும்
காட்டும் குணத்தில்…!

எழுதியவர் : விமல் இனியன் (27-Feb-12, 4:12 pm)
Tanglish : kannadi
பார்வை : 160

மேலே