பூக்கள் சிரிப்பதேன்? (2)
பூக்கள் சிரிப்பதேன்?
சிந்தித்தேன்...
சிந்தித்ததில் சில துளிகளை
சிந்துகின்றேன்...
பூக்கள் சிரிப்பதேன்?
காலை பனியை
கதிரவனின் கரம் தீண்ட,,
சிலிர்த்து சிரித்ததோ!
சுதந்திர தென்றல்
கிலுகிலுப்பு செய்ததோ!
பூக்கள் சிரிப்பதேன்?
பசுமை பாரதத்தில்
பிறந்ததாலோ!
பூக்கள் சிரிப்பதேன்?
இந்தியர்கள்
ஒற்றுமையைக்கண்ட
மகிழ்ச்சியின் வெளிப்பாடோ!
பூக்கள் சிரிப்பதேன்?
தன் தேன் துளிகளை
வண்டுண்டு
பசியாறியதாலோ!
பூக்கள் சிரிப்பதேன்?
உழைப்பாளியின்
கைப்பட்டு
மலர் மாலையானதாலோ!
பூக்கள் சிரிப்பதேன்?
தெய்வத்தின்
தோள் சாய்ந்திருப்பதாலோ!
பூக்கள் சிரிப்பதேன்?
காந்தி சிலையில்
மாலையானதாலோ!
பூக்கள் சிரிப்பதேன்?
தாயின்மடி தவழும்
மழலையின் சிரிப்போடு
போட்டியிடவோ!
பூக்கள் சிரிப்பதேன்?
மங்கையின்
கூந்தலில் தவழ்வதாலோ!
சிந்தனை சிறகு நீண்டது,,,
இறுதியாய்...
ஒரு நாள்
வாழ்வையும்
மகிழ்வாய் வாழ
நினைத்திருக்கும்!
எனவே,
பூக்கள் சிரித்திருக்கும்!!!