குளியல்
குளியல் கோப்பையில்
குளிக்கின்ற பொழுதெல்லாம்
இதயம்
வழுக்கி விழுகின்றது
சவப்பெட்டியில்.
உடல் குளித்து
ஊர் ஊராய் தேடினேன்
உள்ளக்குளியலுக்கான
ஆற்றை.
சில்லறையால்
செல்லரித்ததை சீர்படுத்தி
கறையின்றி செல்ல வேண்டும்
கல்லறை.