உயிர் விடும் இளம் தளிர்
ஹை டெக் சூமிங் கேமரா
கையில் எடுத்து சூட் பண்ணினேன்......
காலை நேரம்.....
கதிரவன் உயர்ந்து கொண்டிருந்தான்
பூத்தூவிக் கொண்டிருந்தது வானில்
புள்ளியாய் பறவைகள்........
தேனீக்களும் தேன் சிட்டுக்களும்
தேகத்தை பனியில் நனைத்தபடி
மோகத்தோடு முத்தம்
முகிழும் மலருக்கு கொடுத்த வண்ணம் இருந்தது
தூரத்தில் ஒரு முட்புதர் - அதன் மேலே
துளிர்ந்த ஒரு குட்டித் தளிர்.....
கேமேராவை சூம் செய்தேன் இன்னும்....
கண்களை இடுக்கிக் கூர்ந்து கவனித்தேன்...
இளந்தளிரின் மேல் எறும்புகள் மொய்த்தது
இதயத்துக்குள் ஏதோ செய்ததது.....
ஏன் ? இன்னும் கேமராவை சூம் செய்ய..செய்ய
அய்யோ அது என்ன......?
சுண்டு விரல் நகத்தில் ரத்தக் கரைகள்...!
பச்சிளம் குழந்தை ஒன்றை
புதரில் இருந்து இழுத்துக் கொண்டிருந்தது
காட்டு நாய்கள்....!
கதறிய உணர்வுகள் பதறிய கைகள்
கீழே கேமராவை போட்டுவிட்டு - இப்போது அதே கிழக்குத் திசை நோக்கி
அவரசரமாக ஓடிக் கொண்டிருக்கிறேன்........!
குறிப்பு :
நான் வசிக்கும் பகுதிக்கு அருகில் முட்புதருக்குள் ஒரு தாய் தான் பெற்ற பிள்ளையை தொப்புள் கொடி கூட சரியாக அறுக்காமல் குப்பையை போல் போட்டுச் சென்றிருக்கிறாள்.
நாய்களின் ஓலம் கேட்டு அக்கம் பக்கத்து மக்கள் காப்பாற்றும்போது உயிரோடு இருந்த குழந்தை ஆஸ்பத்திரியில் இறந்து விட்டது