" அனுமதி இலவசம் " - நெல்லை பாரதி

தானே கெட்டு கொண்டு
தாமே அழிந்து விட
தாங்களை கவலையுடன்
அழைக்கிறோம் ....
எங்கள் கூட்டத்திற்கு
அனுமதி இலவசம் ..

எங்களை வாங்குபவர்களை
திரும்பவும் வாங்க வைப்போம்
எங்களை விரும்புவோரை
தினமும் அழைக்கிறோம் ...
எங்களை ருசிப்பவர்களை
நாங்களே விரைவில் எரிக்கிறோம் ..

எங்கள் கிளை நிறுவனங்கள்
பகையில்லா புகையிலைகள்
மயக்கும் மது பானங்கள்
விட்டில் பூச்சி விலை மாதுகள்
மற்றும் தரமுடன் விளங்கும்
தரங்கெட்ட போதை வஸ்துக்கள் ...

எழுதியவர் : நெல்லை பாரதி (2-Mar-12, 2:27 pm)
பார்வை : 237

மேலே