விழித்தெழு தோழா ....

எங்கோ பிறந்து
வளர்ந்து ,
நட்புக்காற்றைச்
சுவாசித்துக்
காதல் சேற்றைப்
பூசிக்கொள்ளத்
துடிக்கும் மனமே,
உனக்கொரு உண்மை.....

எழுத்துக்கள் மூலம்
சந்தித்த எதிர்பாராத
உறவுகள் ,
நெஞ்சில் வருத்தத்தை
விதைத்து விட்டுச்
செல்கின்றன....

வாயார பேசிவிட்டு
வார்த்தை இல்லாமல்
சிக்கித்தவிக்கும் வலி
இதழ்களோடு ,
இதயத்திற்கும்
சேர்த்து....

மறுக்கத் தவிக்கும்
மனதிற்கும் ,
ஏற்க முடியாத
இதழுக்கும்
எடுத்துக்காட்டு,
வறுமையில்
பாலில்லா அன்னையின்
முகம் பார்த்து
பசியில் துடிக்கும்
பச்சிளங் குழந்தையின்
முகம்......

கிணற்றில் சிக்கிய
எனக்கு காக்கும்
கரங்கள் ஆயரம்
மீட்க வந்தாலும்
முதலை வாயில்
சிக்கித்தவிக்கும்
என் கால்களின்
வலியறியும் ஆசான்
என் இதயம் மட்டுமே....

ம்ம்ம்...
அடிமை ,
பெண்மைக்கு
புதிதல்ல....

விழித்தெழு தோழா...
விடியும் உனக்கென
ஒரு காலை.....!

எழுதியவர் : வனிதா (5-Sep-10, 6:31 pm)
பார்வை : 468

மேலே