அம்மா...

பத்துமாதம் பத்திரமாய் என்பாரம் சுமந்தவளே...
உன்வயிற்றில் என்னை சுமந்து உந்தன் வலி பொறுத்தவளே...

உன் உணவை எனக்கு தந்து எந்தன் உயிர் காத்தவளே...
என்னை உலகை பார்க்கவெய்து எந்தன் அழை ரசித்தவளே...

உந்தன் ரத்தம் எனக்கு தந்து என்னுயிரை காத்தவளே...
நான் தூங்க உன் தூக்கம் வீணாக விற்றவளே...

தண்ணீராய் உனைமாற்றி செடியான என்னை இங்கு வளர்த்தவளே...
நடை நான் பழகும் வரை உன் இடையினில் சுமந்தவளே...

வேண்டுதல்கள் இல்லாமல் வரம் பல தந்தவளே...
தோல்வி கண்டு துவண்டபோது தோல் தர வந்தவளே...

உன் அருகில் இருந்ததாலே பட்டினிய பார்த்ததில்ல...
என் அருகில் நீ இருந்தால் பாசத்திற்கு குறையுமில்ல...

தாயவள் தான் ஒருநாளும் தன்பிள்ளைய வெறுப்பதில்ல...
காயாக இருந்தாலும் ஒருகாலம் கொய்யா கசப்பதில்ல...

தாய் அன்பிற்கு ஈடு இணை இல்லை இங்கே...
தாயவள் தான் இல்லை என்றால் நாம் என்ன ஆவதிங்கே...

எழுதியவர் : Balaji (3-Mar-12, 2:52 pm)
Tanglish : amma
பார்வை : 308

மேலே