ஆகாச வாணி

ஆகாச வாணி என்பது
அசரீரி ஒலி......!

அற்புதத் தேவதைகளும்
அழகிய தேவர்களும்
கிராபிக்ஸ் சினிமா த்ரீடியில்
டிஜிட்டலில் கேட்கும் ஒலி
அசரீரி.............!

அதிகம் படித்தோர் இதை
அவ நம்பிக்கை என்பர்...!

மாமரக் கிளைகளில் கிளிகளின் சத்தங்கள்
மயக்கும் குயிலோசைகள்
கூட்டமாய் பறக்கும்
கொக்குகளின் குரல்கள்....

ரசிக்கத் தெரிந்தவர்கள்
அறிந்து கொள்வார்கள்
அசரீரி என்பது
ஆகாச வாணிதான் - அது

ஆண்டவனின் குரல் அல்ல
அழகை ரசிக்கும் மனசின் குரல் என்று

எழுதியவர் : (3-Mar-12, 2:52 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 256

மேலே