ஆணிவேர் ஒரு அழகான பாடம்

புதைந்து போன ஆணிவேரை
புரிந்து கொள்ள பழகுவோம்

பூக்களை அது
புன்னகைக்க வைக்கிறது - வண்ணத்துப்
பூச்சிகளை அது
பறந்து சிறகடிக்க வைக்கிறது....!

தேன் கூட்டுக்கு
தொட்டில் அமைத்துக் கொடுக்கிறது...!
தேகம் இளைப்பாற
நிழற் குடை பிடித்து நிற்கிறது....!

முகம் மறைத்தே உதவுகிறது - கடமை
மூழ்கியே தாங்குகிறது

விளம்பரம் செய்து அது உதவுவதில்லை
ஆணிவேர்
வியந்து நாம் படிக்க ஒரு நல்ல பாடம்

எழுதியவர் : (3-Mar-12, 1:10 pm)
பார்வை : 294

மேலே