உலகத்தில் வாழ்வு.

உலகத்தில் வாழ்வு
கலகத்தில் மீள்வு;

பலகற்றும் வாழோம்!
உலகத்தில் மீளோம்!

அலைமோதும் கடலாய்..
விலைமோதும் உலகு!

தலைபோகும் வேகம்,
தன்னலமாம் யாகம்!

நிலையற்ற பண்பில்,
நிலைத்திட்ட உலகு!

தொலைத்திட்ட தகைமை;
தொல்லைமிகு பகைமை.

எல்லையில்லாச் செருக்கு;
ஏகோபித்த முறுக்கு.

எங்கே முடியும் இப்பெருக்கு?
என்று முடியும் இப்பெருக்கு.?

நன்று, நன்று, தோழா!
இன்றே நீ இதை உணர்ந்தால்..

பாலு குருசுவாமி

எழுதியவர் : பாலு குருசுவாமி (4-Mar-12, 3:23 pm)
சேர்த்தது : Baluguruswamy
பார்வை : 160

மேலே