அழகான ஒரு பேச்சு.

அமைதியைப்போல்
அழகான ஒரு பேச்சை
அகிலத்தில் நான் கேட்டதில்லை.
எதுகையின்ரி.. மோனையின்ரி...
ஏற்ற இறக்க மாற்றமின்றி...
உச்சரிப்பும் எச்சரிப்புமின்ரி..
நச்சரிப்பு என்ற நாரசமுமின்ரி....
உள்ளத்தின் உறைவிலே
கள்ளமில்லா நிறைவிலே...
உதடுகள் பிரியாமல்...
உண்டான அமைதியைப்போல்
அழகான ஒரு பேச்சை
அகிலத்தில் நான் கேட்டதில்லை.

பாலு குருசுவாமி.

எழுதியவர் : பாலு குருசுவாமி. (7-Mar-12, 7:52 am)
பார்வை : 185

மேலே