இயற்க்கையின் அழகு ...
நிலவு இருட்டுக்கு
அழகூட்டியிருக்கிறது ...!
தென்றல்
இயற்கையின் சங்கீதத்தை
இனிமையாய் இசைக்கிறது ...!
அலையலையாய் சிரித்து
நுரைநுரையாய் பொங்குகிறது கடல் ...!
காதலர்களுக்கு
இயற்கை அமைத்துக்கொடுத்த
இலவச சிம்மாசனம் கடற்கரை ...!
பசுமை போர்வைபோர்த்தி
நீல நிற வானவில்லாய்
கண்ணுக்கு விருதளிக்கிறது இயற்க்கை ...!
.
ஆஹா ...
இயற்க்கை இவ்வளவு
அழகாய் இருந்தும்
இயற்கையை நேசிக்காமல்
மௌனமாய் வாழுகிறது இந்த மானுடம் ...!
இயற்க்கை இயற்க்கையாய்
இருக்கிறது
இயற்கையின் அழகை ரசிக்காத
மானுட மரங்களை சுமந்து கொண்டு ...!