பதுங்கு குழிகள்!
பாதிப்பென வரும்போது
பாதுகாப்பிற்காக
சாதி அமைப்புகளில்
சாதியம் நாடுவது ...
பாதிப்பென வரும்போது
பாதுகாப்பிற்காக
மத அமைப்புகளில்
மத அடையாளத்தை
தேடிச் செல்வது ...
பாதிப்பென வரும்போது
பாதுகாப்பிற்காக
எதிர் கட்சியிலிருந்து
ஆளும் கட்சிக்கு
தாவிச் செல்வது ...
பாதிப்பென வரும்போது
பாதுகாப்பிற்காக
கோஷ்டிகளை
உருவாக்கி
கலகம் செய்வது ...
பாதிப்பென வரும்போது
பாதுகாப்பிற்காக
கணவன்
மனையிடமிருந்தும்
மனைவி
கணவனிடமிருந்தும்
பிள்ளைகள்
பெற்றோரிடமிருந்தும்
பொய்களால்
முகத்தை மறைப்பது ...
இப்படி
எத்தனை எத்தனை நாள்கள்!
எத்தனை எத்தனை முகங்கள்!
பாவத்தை பக்குவப்படுத்த
பதுங்கு குழிகளில்
பாவக் கட்டுகளாய்!
- ஜோ.தமிழ்ச்செல்வன்