வகுப்பறை

கல்லூரியின் முதல் நாள்
தெரியாத கிளாஸ் ரூம்
தெரிந்து கொள்ள நினைத்து
கேட்டேன் ஒருவரிடம்
பளார் என்ற சத்தம்
கண் இமைக்கும் நேரத்தில்
விழுந்தது அடி
கலங்கியது என் கண்கள்
அழ துடிக்குது நெஞ்சம்
தப்பிக்க நினைத்து
அகன்றேன் அவ்விடத்திலிருந்து
சற்றே திரும்பி பார்த்ததில்
எட்டடி தூரத்தில் எனது வகுப்பறை
கடலுக்குள் முத்தெடுத்த
புதல்வன் போல
கல்லூரிக்குள் முத்தெடுத்த
முத்தெடுத்த புதல்வனாய்
புகுந்துவிட்டேன்
என் வகுப்பறைக்குள்

எழுதியவர் : காமேஷ். ப (10-Mar-12, 9:43 am)
சேர்த்தது : kames kamesh
Tanglish : vagupparai
பார்வை : 227

மேலே