அவளின் நினைவுகள்

மலரே!
நீ பூங்காற்றை தேடுகிறாய்!
நானோ!
புதைந்து போன
என் நினைவுகளை தேடுகிறேன்!
முட்கள் சூடிய கள்ளிச்செடியில்
உன் பெயர் - இன்று
என்னை காயபடுத்தியது!
நான் கிழித்தெறிந்த
வெள்ளை காகிதம்
நீ என்னை பிரிந்த கதை
சொல்கிறது!
வெண் ஆடை சூடிய
புல்வெளிகள்
நாம் அமர்ந்த தடம் காட்டுகிறது!
தோண்ட தோண்ட
கிடைக்கும் புதையல் - என்னவளின்
நினைவுகள்!