அதை எப்போது சொல்வாயோ தெரியவில்லை...

அன்பே..,
சிறு காதலைச் சொல்கின்ற தைரியத்தை,
ஏன் எனக்குள் இருந்து திருடிக்கொண்டாய்..?

இதயத்தில் அணுஒன்றை நிறுத்திவைத்து,
ஒரு இமைப்பொழுதில் இரண்டாக வெடிக்க வைத்தாய்...

என் இல்லாத இதயத்தில் இடம் பிடித்தாய்...
அதன் சொல்லாத துடிப்புகளைப் படம் பிடித்தாய்...

கண்ணாலே காதலினை அனுப்பி வைத்தாய்...
அதைச் சொல்லாமல் தினம் என்னைச் சாகவைத்தாய்...

பேசுகின்ற பைந்தமிழும் பிடிப்பதில்லை...
உனைக் காணாமல் என்னிதயம் துடிப்பதில்லை...

என் மனமென்னும் ஓடையிலே கல்லெறிந்தாய்...
உன் விழிகளிலே நாணேற்றி சொல்லெறிந்தாய்...

உதிக்கின்ற மொட்டுகள் எல்லாம் மலர்வதில்லை...
உன் கனவின்றி என் காலை புலர்வதில்லை...

தொடர்கின்ற தொல்லைகள் பல கொடுத்து,
தொலைவினிலே என்னை நிறுத்திவைத்தாய்...

ஓயாமல் அழுகின்ற குழந்தையைப்போல்,
ஒருவனாய் நீ என்னைப் புலம்பவைத்தாய்...

நோயாகத் தொடர்ந்துவரும் காதலினை,
நோகாமல் நீ எனக்குக் கொடுத்துவிட்டாய்...

ஏனிந்தக் காதல் வதை? புரியவில்லை...
அதை எப்போது சொல்வாயோ? தெரியவில்லை..!

(தொடரும்...)

-ஆனந்தன்.

எழுதியவர் : ஆனந்தன் (11-Mar-12, 10:01 pm)
பார்வை : 266

மேலே