காதல் கவிதை பயிரை வளர்க்கும்...

ஒற்றைப் பறவையாய்த்
திரிந்து கொண்டிருந்த
நான்...
உன்னைக் கண்ட
நாள் முதல் இந்த
உலகத்தோடு உலாவி வருகிறேன்...

உன்னைப் பார்த்த
நாட்கள் கொஞ்சம்!
உன்னை மட்டுமே
தேடித் தவிக்குது என் நெஞ்சம்!

அன்பே...!
உன்னைப் பார்க்கும்
முன்பு நான்
எப்படி இருந்தேன்
தெரியுமா...?

உயிரெழுத்தும்
மெய்யெழுத்தும் கூட
தலையெழுத்தே என்று
எண்ணிப் படித்தேன் -
படிப்பில் ஆர்வம் இல்லாததால்...!

இன்று,
உன்னை நினைக்க வைத்து
என்னை மறக்க வைத்தாய்...
காதல் போதையில்
நான் மாறிவிட்டேன் கவிஞனாய்...

புரியாதப் புதிராகவும்
விளங்காத விடையாகவும்
இருந்த என்
வாழ்வைக் கூட
அர்த்தமுள்ளதாக்கி விட்டாய்...

நீ ,
என் காதல் தேவி மட்டுமல்ல
என் கவிதைத் தாயும் நீயே...!

உன்னால் கிடைத்தது
இந்த காதல் வரம் - என்
கவிதைப் பாடலில் நீ
எட்டாவது ஸ்வரம்!

நீ
கொடுத்த இந்த வரம்
நம்
பயிரை (உறவை) மட்டுமல்ல
என்
உயிரையும் வளர்க்கிறது
உன்னை எனக்குள் சேர்த்து...!

எழுதியவர் : சுதந்திரா (7-Sep-10, 7:38 pm)
சேர்த்தது : சுதந்திரா
பார்வை : 390

மேலே