இலங்கையில் என் இனம் !

இலங்கையில் மறத்தமிழன் - தன்
இனத்திற்காக மடிந்தான்

சொல்லி மாளாது வேதனை - மனதில்
மறையாது அந்த போர் முனை

இனியும் தப்ப முடியாது - இந்த
அதிபர் போர்வையில் இலங்கை அரக்கன்

உலகையே உருக்கிய போர் - இன்று
ஐநா சபையில் போர் குற்றமாக

போர் குற்றமாக நிரூபணம் - இன்னும்
போதிய ஆதாரம் ஏராளம்

எத்தனை உயிர்கள் மாய்ந்தது
ஏத்துனை சிசுக்கள் ஏரிந்தன

வாழ நினைத்து இலங்கையில்
வீழ்ந்தது தமிழ் இனம்

பெண்கள் மானபங்கம் கொண்ட
தீராத ராணுவத்தின் திமிரு

கனத்தது மனது மடிந்த - நம்
தமிழன் கொண்ட கனவு எண்ணி

தினம் செத்து மடியும் மீனவன்
இலங்கை கடற்படையால் இன்றும்
சீற்றம் கொண்ட கடலில் பிணமாய்

நெருங்கி விட்டது விடிவு
எதிரிகளுக்கு இதோ அழிவு

சினம் கொண்ட தமிழ் இனம் என்ன !
உலகமே உன்னை மன்னிக்காது

மடிந்த்தது தமிழனின் கனவு அல்ல
விரைவில் விடிந்திடும் அது நனவாக

கனத்த மனதோடு மாண்ட்ட தமிழனுக்கு
எங்கள் கண்ணீர் துளிதான் காணிக்கை !

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : காதர் . (16-Mar-12, 10:33 am)
பார்வை : 227

மேலே