கலைந்த கனவு உயிர் பெறவே

காலை உறக்கம் கவிழும் போதும்
கலைந்த கனவு உயிர் பெறவே

நிறுவனமாய் நீ மாறு
நிதித்தனமாய் நீ இயங்கு

செயல்களனைத்தும் வளர்ச்சிகாய்
சீர்படுத்தும் வாழ்க்கைகாய்

எடுத்தமேனி இயற்கையிலே
எதிரிதனங்கள் உடைத்துவிடு

நோக்கம் கொஞ்சம் கல்வியிலே
நோன்பை பெறுகின்ற கலைகளிலே

தலைமை கடமை உன் வழிதான்
தமிழும் மலரும் உன் கவிதான்

ஒய்வு கொஞ்சம் ஞானத்திலே
உலகை உயிக்கும் பக்தியிலே

வயதை பிற்பகுதி வகுத்துவிடு
வாழ்க்கை அனுதினம் தொகுத்துகொடு

நலிவடைந்த விவசாயம்
நன்மை பெறவே புது சாயம்

வானவில்லை ஒடித்துகோடு
வண்ணம் மழையில் கரைத்துகோடு

தொழில்கள் மிகுதி தோள்களிலே
தொங்கும் சாதனை மார்பினிலே

இலங்கிய திசைகள் கைகளிலே
ஏறிய கால்கள் இமயத்திலே

கொடிகள் உயர்த்தியே குதூகலத்தில்
குளுமை நிலவையும் கூட்டி வந்து

இருளின் கனவை எரித்துவிடு
இத்தனை உண்மைகள் படைத்துவிடு

நதிகள் செல்லும் வழியிலே
நடுவில் நின்ற அணைகளெல்லாம்

பொடிபொடியாய் புது வெள்ளம்
பொசுங்க வேண்டும் சுயநலன்கள்

சட்டம் புதுவரவில் சேர்த்துவிடு
சாகும் குற்றம் கழித்துவிடு

சேவை உயர பெருக்கி விடு
சிந்தனை மலர திருத்தி விடு

ஓய்வை உலுக்கி விளையாடு
ஒளிந்த திறமையை நீ கூடு

தங்கம் குழிதோண்டி எடுத்துவிடு
தாழ்வின் இருளை நீக்கி விடு

பட்டம் ஒன்று பறக்க விடு
பதக்கம் ஒன்று செதுக்கி விடு

இமயம் இமயம் தேடி தேடி
இமைகள் தூரிகையால் கீறுகின்றேன்.

எழுதியவர் : A. Rajthilak (8-Sep-10, 6:27 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 462

மேலே