அனாதை குழந்தைக்கு ஒரு தாலாட்டு...!

பாலுட்ட தாலாட்ட
தாயும் உனக்கு இப்ப இல்லடா..!
சீராட்ட மேலேற்ற
தந்தையும் உனக்கு இப்ப இல்லடா..!

ஆயிரம் பூ உனக்காக பூத்தாலும்
உன் தாய் போல பூக்காது..!
காலமெல்லாம் கத்திருந்தாலும்
உனக்கு கண்ணீர் பூ தான் பூக்குமடா..!

இறைவன் உன் வாழ்க்கையை
தண்ணீரிலே எழுதிவச்சான்
தவறுதலா போயிடுச்சு..!

உன் தாயும்
பன்னிர்ருனு நினைச்சுபுட்டு
பதை மாறி போய்புட்டா..!
உன்னை வெறும் நீர்
என நினைச்சுபுட்டு
கை கழுவி விட்டுபுட்டா..!

உனக்கு நடந்து பழக
இரண்டு கால் இருக்கு..!
நடை சொல்லித்தர உனக்கு
இங்கே எந்த ஆள் இருக்கு..!

தூக்கம் வரவில்லை
என்ற தாக்கம் இல்லை
இப்போ உனக்கு..!
தாய் விட்டு விட்டு
சென்று விட்டாலே
என்ற ஏக்கம் தான்
உனக்கு இப்போ இருக்கு..!

அழுவதுதான்
இனி வரும் காலங்களில்
உனக்கு வடிக்கை..!
இந்த சமுதயத்தில் இது எல்லாம்
இப்பொழுது ஒரு வேடிக்கை..!

நீ சந்திரனாம்! சூரியனாம்!!
எதிர் காலத்தின் பாலகானம்..!
கண் உறங்கு! கண் உறங்கு!!
உன் தாயை மறந்து நீ உறங்கு..!!!

எழுதியவர் : இளையகவி இர. இரவி (8-Sep-10, 8:11 pm)
சேர்த்தது : R.Ravi
பார்வை : 556

மேலே