நிம்மதி இல்லாத வாழ்க்கை
வாழ்க்கை
ஒன்றும் புரியவில்லை
வாழ்வதற்கும்
தெரியவில்லை
விதி மேல்
பழி போட மனமில்லை
விதியையும் மதியால்
வெல்வது எளிதில்லை,
கிடைத்த வாழ்க்கை
பிடிக்கவில்லை
பிடித்த வாழ்க்கை
கிடைக்கவில்லை
நிம்மதி இல்லாத
வாழ்க்கையில்
நித்திரையை தேடுவது
கடலுக்குள் விழுந்த
ஊசியை தேடுவது போன்றது
எப்போதும் கிடைப்பதேயில்லை
நிம்மதியும் சந்தோசமும்
ஏதேனும் கடைகளில்
விற்றால் கூட
விலை கொடுத்து
வாங்கிவிடலாம்.....
ஒருவேளை என்னை
போல் பலர்
அக்கடை வாசலில்
வரிசையில் நின்றால்
அங்கும் நிம்மதி இல்லாமல் போய்விடுமே...
என்ன செய்வேன்???????