மகளுக்கு வாழ்த்து

போராட்டமான வாழ்க்கை, , , , ,
சந்தடிநிறைந்த சாலையில் நடந்து ,
மலைஏறும் மலைப்பில் கிடந்து ,
நிறைவேறா லட்சியங்களை சுமந்து ,
ஆசைகளை அடிமனதிலே மறந்து ,
கொஞ்சம் பயந்து , கவலையில் களைத்து ,
வீடு வந்து சேர்கையில் ,
மகளே - நீ கொடுக்கும்
ஒரு செம்பு தண்ணீரில்
தாகம் தீர்க்கையில் ,
மீண்டும் உயிர்பிக்கிறேன்
பினிக்ஸ் பறவையாய் .

எழுதியவர் : பந்தளம் (ரமேஷ்பாபு ) (19-Mar-12, 5:27 pm)
சேர்த்தது : பந்தளம்
பார்வை : 208

மேலே