.....உள் நாக்கு...

நாங்கள் பச்சை தமிழர்கள் அல்ல
........எச்சைத் தமிழர்கள் !
பதவிக்காக எதையும் செய்யும்
........கொச்சைத் தமிழர்கள் !
உண்மையில் நாங்கள் பொய்மை பேசுவதில்லை !
...எங்களை நாங்கள் காட்டிக்கொடுப்பதில்!
நம்புங்கள் - ஒற்றுமையில் எங்களை மிஞ்ச யாருமில்லை !
ஏனென்றால் ,
எங்கள் தொப்புள் கொடி
இரத்தம் சொட்ட சொட்ட வேறோடு அறுக்கப்பட்டபோது கூட
ஒற்றுமையாய் வேடிக்கை பார்த்த
ஒன்றுபட்ட தமிழர்கள் என
உலகுக்கு உணர்த்தியவர்கள் நாங்கள் !
மீண்டும் சொல்கிறேன்...
நாங்கள் பச்சை தமிழர்கள் அல்ல
...........பச்சோந்தித் தமிழர்கள்..!

எழுதியவர் : isha harinee (20-Mar-12, 11:34 am)
பார்வை : 214

மேலே