நான் சொல்வதெல்லாம் உண்மை.....
புழுக்கள் மறைந்து விட்டன !
பூச்சிகள் அழிந்து விட்டன !
பட்டாம்பூச்சிகள் தொலைந்து போயின !
பறவையினம் கூண்டுக்குள் வந்தது !?
மாடுகள் மாநகரம் நோக்கி படையெடுத்தன !?
எறும்புகள் இனத்தை இழந்தன !
மண்கள் மனத்தை இழந்தன !?
பெண்கள் மானத்தை புதைத்தனர்
தாத்தாவும் பாட்டியும் கதைகளாயினர்!
அப்பனும் ஆத்தாளும் அனாதைகளாயினர்!
அக்காள் தூரத்து சொந்தமானால் ,
அத்தை தொலைந்து போன சொந்தமானால்
மனிதன் இயந்திரன் ஆனான்:
பர்கரும் பீசாவும் உணவுகள் ஆயின !
மனிதாபிமானம் பாதியானது !
பாதியும் இயந்திரம் ஆனது !
ஆண்கள் பெண்களானோம் !?
பெண்கள் ஆண்களானோம் !?
தங்கம் பூமியை ஆண்டது
பணம் மனிதனை ஆண்டது
நாங்கள் நான் ஆனது
நான் தன்னலம் ஆனது
தன்னலமும் இயந்திரமானது :
இயந்திரமே எங்கள் வாழ்க்கையானது !
காடுகளை முடிந்தவரை அழித்தோம்
கடலை தெரிந்தவரை மாசுபடுத்தினோம்
காற்றையோ படுத்தினோம் !?!
இன்னும் சொல்ல இருக்கிறது
ஆனால் ,
வெட்கப்படுகிறதே என் பேனா !
இந்த-
வல்லரசின் வளர்ச்சியை நினைத்து !?!...