வானம் கண்டேன் வாழ்வினை கொண்டேன்

உயர்வானம் கண்டேன் - என்
சிந்தனையை உயர்வென கொண்டேன்
விரிவானம் கண்டேன் - எல்லோர்யிடமும்
பழகும் தோழமை கொண்டேன்
தெளிவானம் கண்டேன் - வாழ்வின்
இலக்கினை தெளிவென கொண்டேன்
இருள்வானம் கண்டேன் - துன்பமும்
இணைந்ததுதான் வாழ்கை என்ற
எதார்த்தமும் கொண்டேன்
கருமேங்களை கிழித்திடும்
ஒளிவானம் கண்டேன் - முயற்சித்தால்
வெற்றியுண்டன புதிய நம்பிக்கை கொண்டேன்
வானம் கண்டேன் - என்றும்
மகிழுந்திடும் வாழ்வினை கொண்டேன்

எழுதியவர் : ஆ . தைனிஸ் (20-Mar-12, 4:30 pm)
பார்வை : 240

மேலே