ஒரு கவிஞன்

தர்ம தாயின்
தவ புதல்வன் நான்

தமிழ் தாயின்
தலைமகன் நான்

வறுமை தாயின்
வளர்ப்பு மகன் நான்

நம்பிக்கையின்
நடு மையம் நான்

நட்பின் முழு
உருவம் நான்

நட்சத்திரங்களின்
அக்னி குஞ்சு நான்

தன் மானத்தின்
தலைப்பு செய்தி நான்

காதலின்
கடைசி குழந்தை நான்

இசையின்
இன்ப காதலன் நான்

துரோகத்தின்
தூரத்து எதிரி நான்

எதிரிகளின்
தூரத்து நண்பன் நான்

கற்றலின்
கைக்குழந்தை நான்

பிழைகளின்
பிதாமகன் நான்

பாச மழையின்
சிரபுஞ்சி நான்

பனி மழையின்
உள்ளம் நான்

எரிமலையின்
சீற்றம் நான்

அன்பின்
அடிமை நான்

கர்ணனின்
காலடித்துகள் நான்

துன்பத்தின்
துயில் கூடம் நான்

இன்பத்தின்
இளைப்பாறல் நான்

அன்பால் எய்ப்பவர்களுக்கு
ஏற்றவன் நான்


கற்று கொண்டிருக்கிறேன்
எழுதுகோலின் கூர்மை தீட்ட

வெண் தாளின்
வெண்மை குறைக்க
மேகத்திற்கு
திரை இட
காற்றுக்கு
வேலி இட
பூக்களுக்கு
கவசம் இட
தீமைகளுக்கு
தீ இட
பழமைகளை பாதுகாத்திட
புதுமைகளுக்கு
புத்தாடை அணிவிக்க
காதலின்
கற்பு காத்திட
நட்பின்
நம்பிக்கை காத்திட
துரோகங்களை
தூக்கிலிட
பாரங்களை சுமந்திட
ஒரு கவிஞன் ஆக
கற்று கொண்டிருக்கிறேன்

எழுத்தில் நன்மை
செய்தால் வாழ்த்துங்கள்
இல்லையேல் தூற்றுங்கள்

எழுத்து பிழையென்றால்
மன்னிக்க்கவும்
கருத்து பிழையென்றால்
புதைத்துவிடுங்கள்
என் கவிதைகளோடு
சேர்த்து என்னையும்
இம்மன்னோடு புதைத்துவிடுங்கள்
ஏனென்றால் நான் கவிஞன் .,...............

எழுதியவர் : Ramakrishnan (21-Mar-12, 10:04 pm)
சேர்த்தது : RMKRSN
Tanglish : oru kavingan
பார்வை : 194

மேலே