எந் தமிழ் மொழி இன்று...!!!
ஜீன்களில் கலந்தது !!
இரத்தத்தில் உறைந்தது !!
நரம்புகளாய் நீண்டது !!
உயிர் கருவாய் வளர்ந்தது !!
கோடி நாட்கள் வாழ்ந்தது !!
உணர்வுகளாய் மலர்ந்தது !!
சுவாசமாய் நாங்கள் கொண்டது !!
இன்னும் நான் என்ன சொல்ல !?
கருவாய் இருக்கும் போதே
உயிராய் ஊட்டிய உணர்வு மொழி
எந் தமிழ் மொழி..!
ஆனால் - இன்று !
அனைத்தையும் அறுத்துவிட்டு
ஆங்கில இரத்தத்தை புகுத்துகிறேன்..!!
என் உணர்வில் !!!
என் உயிரில் !!!
எந் தமிழ் நாட்டில் நான் வாழ..!!!