புறப்படுங்கள்

வீரம் கொண்ட தமிழா!
வீறு கொள் தமிழா!
சாதி வெறியர்களின்
எண்ணங்களை
சாகடிப்போம் தமிழா!
மூட பழக்கங்களின்
முன்னுரைகளை
மூடி வைப்போம் தமிழா!
தீய குணங்களை
தீ கொண்டு
பொசிக்கிடுவோம் தமிழா!
நல்ல குணங்களை நாளும் எடுத்துரைப்போம் தமிழா!
வென்றவர் ஆதிக்கம்
விண்ணை முட்டும் மகிழ்ச்சி!
தோல்வியால்
துவண்டவர்களை
தோள் கொடுக்க
புறப்படுவோம் தமிழா....!

எழுதியவர் : கிருஷ்.ரவி (22-Mar-12, 6:13 am)
பார்வை : 155

மேலே