" காதலே மாண்டு போ........."

மனதுகுள்ளே...........
காளையரின் மார்புக்குள்ளே.......
கன்னிகள் மஞ்சள் தேய்த்து
குளிக்கையிளே............
மாற்றம் காட்டும்
மாயாவி காதலே.....!

பருவ பெண்களின்
அருவ சிரிப்புகளில்
அரசாங்கம் நடத்தும்
அரக்க காதலே..........!

அரும்பு மீசை அரும்பையிலே
குரும்பு பார்வைக்கு மத்தியிலே
அரளி விதைக்கும்
பாவிமக காதலே...!

நீ மாய்ந்து போ.............

வாலிப பவருவத்தே
வதை செய்யும் உன்னை
கொன்றுபோட்டாலும்
குத்தமில்லை..;

உன் மரணத்தால் இங்கே

தற்கொலைகளின் தடம் புரண்டிருக்கும்;
தாடையிலிருந்து தாடி மாய்ந்திருக்கும்;
வெள்ளை சுருட்டுக்கு விற்பனையிருக்காது;
சாராய பைகள் சகதியில் கொட்டபடும்;
இருசக்கர வாகனங்களின்
பெருக்கம் வற்றிபோகும்;
அதில் இறுக்கி பிடிக்கும்
நெருக்கமும் செத்து போகும்;
வேகதடைகளுக்கும் பள்ளங்களுக்கும்
வேலையிலிருந்து ஓய்வு கொடுக்கபடும்;

மேலும், பல மாற்றங்கள்
பிறப்பெடுக்கும்;

இப்போது சொல் காதலே......
மாய்ந்து போகிறாயா......??

எழுதியவர் : கவிதை கிறுக்கன் (22-Mar-12, 4:18 pm)
சேர்த்தது : ஆரோ
பார்வை : 206

மேலே