"இன்றைய காதல்"

காணவில்லையே.............
காதலை

காண முயன்று பார்க்கிறேன்
கடற்கரையோர மணல்மேலே
கண்ணியமான காதலின் சுவ‌டுகளை
காணுகின்றேன் நானும்

இருள் மூடும் இனிய தருணத்தில்
இமை திறந்து பார்க்கிறேன்
இன்றைய காதலர்களின்
இச்சையால் எச்சில் பட்டு
கொச்சை படுத்த படும் காதலை,

படகின் மறைவுகளில்
பனி உதிரும் நிமிடங்களில்
இயற்கை உபதைகளின் பக்கத்தில்
இடைவெளி இல்லாத நெருக்கத்தில்
இழிவு படுத்தப்படும் காதலை,

கண்டேன் நானும்

குடைகளின் நிழலை
கொஞ்சமாக பிச்சையெடுத்து
கொஞ்சிமகிழும் காதல‌ர்களை,

புதர்களின் புண்ணியத்தில்
இதழ்களில் எச்சில் நடமிட்டு
இன்பம் காணும் காதலர்களை,

இச்சை தீர்ந்த பின்
இன்னொருத்தியை(வனை) தேடி
காதலை அசிங்க படுத்தி
தும்பைசெடியில் தூக்கு மாட்டும்
துரோக காதலர்களை...

காண முயன்று கொண்டிருக்கிறேன்

காவியாகாதலை அல்ல‌
கண்ணியமான காதலை

கண்டோர் இருப்பின்
காட்டுங்கள் எனக்கு........

எழுதியவர் : கவிதை கிறுக்கன் (22-Mar-12, 4:25 pm)
பார்வை : 284

மேலே