நெஞ்சம் பொறுக்குதில்லை
அன்றொரு நாள்
மறந்தும் கூட
பிரிவு வேணாம் என்றே - இக்
கல்விக் கூட்டுக்குள் என்
இதயத்தை புூ மெத்தையில்
கிடத்தி வைத்திருந்தேன்
ஹ
இன்றோ அது
குருதிக்குள் நனைந்து
புழுங்கிக் கிடக்கிறது.
தீயைச் சுவாசிக்கச் சொன்னாலும்
சம்மதம் தந்தது
அன்றென் மனது.
வெறும் மூச்சுக் காற்றைக் கூட
சுவாசிக்கப் பாரமாயிருக்கிறது
இன்று.
நண்பர்களின் பேச்சொலிகள்
கூக்குரலாய் வெறும்
நச்சரிப்பாய் அமைந்தது அன்று
இந்தப் பிரிவின் ரணத்தால் மௌனிக்கும்
ஒவ்வொரு வினாடியும்
இரத்த விடியல்களாகிறது
இன்று.
உயிரில்லா மனிதம்
உணர்விலால இதயம்
உறவிலா வாழ்க்கை
இரவாகிப் போன உலகம்
இவையாவும்
இக் கல்லூரியின் சகவாசத்தால்
தொலைந்து போனது அன்று.
இனி இவைதான் தொடர் கதையாமோ
எனும் பீதி மட்டுமே இன்று.
குருதிக் கனவுகளில் நின்று
பன்னீர்க் கனவுகளைத்
தத்தெடுத்த காலமது
பன்னீர்க் கனவுகளை
உடைத்து
குருதிக் கனவுகளில் நீந்தும்
காலமிது.
கூடி இருந்தும்
கும்மாளம் அடித்தும்
மேளம் போட்டன
இளமையன்று.
இனி
விதி விலகிய ஓட்டமென
உள்ளம் வரக்தி காண்கிறது
இன்று.
சந்தோசம் மரணித்து
சலனங்கள் எமைச் சுூழ்ந்து
பனி பெய்யும் இரவுகளும்
புண்ணாகி அழுகிறது
எம் பிரியாவிடைக் களமின்று.
இதயங்கள் இடம்மாறி
சுவாசங்கள் ரணமாகி
பாசமதைப் பேசுகின்ற
பொல்லாத நேரம் இது
படி தாண்டும் வேளையினில்
கல்லூரிப்
படி தாண்டும் வேளையினில்
நேசப் பிரிவினையைப்
பேசுகையில்
நெஞ்சம் பொறுக்குதில்லை
என் நெஞ்சம் பொறுக்குதில்லை.
முகவரியைத் தமதாக்கி
முகங்களையும்
மறவாதிருக்க
முயற்சிப்போம் இன்றைய
நாள்
முடிவிதுவே பிற வழியில்லை.
விரைகின்றேன் என்
இடம் நோக்கி. இனிப்
பிரிவில்லை எமக்கின்றே
ஒரு பிரிவில்லை எமக்கின்றே.