உன்னால் முடியும் தோழா

வானம் தான் எல்லையா
வாழ வழி இல்லையா
வாழ்ந்து தான் பாருடா
என் தோழா நீயும் கொஞ்சம்

தோல்விதான் வாழ்க்கைய
என்பதை மறந்திட்டு
வெற்றியை நோக்கியே
நீ பயணம் செய் தோழா

என்ன இது வாழ்க்கை என்று
சோர்ந்து தான் போகாது
என்னாலும் வாழவும் முடியும்
என்பதை நீ காட்டு

வல்லவனாய் இருப்பவனுக்கு
புல்லும் ஆயுதம் தானே
உனக்கென்ன உலகில் வாழ
வழிகளா இல்லை சொல்

ஆயுதத்தை எடுத்து தான்
வாழ்கையை நடத்தனுமா - உன்
அறிவை எடுத்தால் கூட
வாழ்கையை நடத்திடலாம்

வெறியோடு போராடு - நீ
உலகை வென்றிடலாம்
அறிவோடு செயல்பட்டால் - நீ
வெற்றியை அடைந்திடலாம்

எழுதியவர் : சிவா அலங்காரம் (24-Mar-12, 10:14 am)
பார்வை : 385

மேலே