ஆசை

சூரியனாக
சுற்றிவர ஆசை

நட்சத்திரமாக
நகர்ந்துவர ஆசை

பூமியாக
புவிமுழுவதும் இருக்க ஆசை

பட்டாம் பூச்சியாக
பலவர்ணமாக இருந்திட ஆசை

சிறுத்தையாக
சீறிவர ஆசை

பூனையாக
பதுங்கிவர ஆசை

மீன்களாக
துள்ளிவர ஆசை

கொடியாக
உதவிட ஆசை

தென்னைமரமாக
உயர்ந்திட ஆசை

என்றும் இளமையாக
இருந்திட ஆசை

பெண்ணாக பிறந்துபடும்
வேதனை தெரிய ஆசை

எழுத்துவில் யாரும் எழுதிடாத
கற்பனைகெட்டாத கவிதை எழுத ஆசை

இதை எல்லாம்விட
இக்கணமே இறந்து
இப்பொழுதே பிறந்து
இறைவா உன்னை
போற்றிப்பாடி உன்புகழ்
உரைத்திட ஆசை

என்றும் அன்புடன் "நட்புக்காக"
இன்றும் மட்டும் என் "ஆசைக்காக"

எழுதியவர் : சேதுராமலிங்கம்.உ (24-Mar-12, 11:32 am)
Tanglish : aasai
பார்வை : 299

மேலே