தோல்வி...

தோல்வி...
மீண்டும் தோல்வி...
முயன்றும் தோல்வி...
நண்பனுக்காய் ஒரு தோல்வி ...
காதலுக்காய் சில தோல்வி ...
காதலிக்காய் பல தோல்விகள்...
இப்படியாய் என் வாழ்வில்
பல முறை பல தோல்விகள்...!
பழகிய தோல்விதான் என்றாலும் ;
சில தருணங்களில்
பயமுறுத்தும் தோல்வியாகவும்..!
சில நாட்கள்
அத்தோல்வியே வெற்றியாக
அமைந்த நாட்களும் உண்டு...!!!
ஆனாலும் , நின்ற பாடில்லை ;
இத்தோல்விச் சந்ததிகள்..!!!
மீண்டும் மீண்டு ;
வந்து கொண்டே தான் இருக்கின்றது
எனை மீட்கின்ற தோல்வியாக...!!!