மகிழ்வே வருக!
மகிழ்வே வருக! மகிழ்வே வருக!
நிகழ்வெல்லாம் மகிழ்வாய் மலர்க!
மகிழ்வே வருக! மகிழ்வே வருக!
நினைவுத் துகள்களெல்லாம்
மகிழ்வே நிறைக!
மகிழ்வே வருக! மகிழ்வே வருக!
மனங்கள் எங்கும் மகிழ்வே நிறைக!
மகிழ்வே வருக! மகிழ்வே வருக!
சினங்கள் போக்கி மகிழ்வே நிறைக!
மகிழ்வே வருக! மகிழ்வே வருக!
தனமெல்லாம் பெருக்கி மகிழ்வே நிறைக!
மகிழ்வே வருக! மகிழ்வே வருக!
தானம் பெருக மகிழ்வே அருள்க!
மகிழ்வே வருக! மகிழ்வே வருக!
நிதானம் நிறைந்து மகிழ்வே மலர்க!
மகிழ்வே வருக! மகிழ்வே வருக!
ஈனம் மறைந்து மகிழ்வே நிறைக!
மகிழ்வே வருக! மகிழ்வே வருக!
மாண்புகள் பொலிந்து மகிழ்வே நிறைக!
மகிழ்வே வருக! மகிழ்வே வருக!
அன்புரை அகமெலாம் மகிழ்வே நிறைக!
மகிழ்வே வருக! மகிழ்வே வருக!
கோபமும் பாபமும் மறைந்து
மகிழ்வே நிறைக!
மகிழ்வே வருக! மகிழ்வே வருக!
பகைமை தொலைந்து மகிழ்வே மலர்க!
மகிழ்வே வருக! மகிழ்வே வருக!
தகைமை நிறைந்து மகிழ்வே மலர்க!
மகிழ்வே வருக! மகிழ்வே வருக!
கண்ணிலும் கருத்திலும்
மகிழ்வே மலர்க!
பாலு குருசுவாமி.