பட்ஜெட்

பட்ஜெட் நாள்-
இது
வரிக்குதிரை
குட்டிப்போடும் நாள்!

ஆனால்,
இனிப்பு மனிதர்களே
உமக்கு
இனிக்கும் செய்தி!
இன்சுலினுக்கு
இருக்கு வரிவிலக்கு.
உமக்கு கிடைத்ததோ
வரியில்லாத குதிரைக்குட்டி!

குண்டு மனிதர்களே!
உடலை குறைக்க
ஓட்ஸ் குடியுங்கள்.
உமக்கு கிடைத்ததும்
வரியில்லாத குதிரைக்குட்டி!

எது எப்படியோ,
மக்களே! உசார்,
குதிரைக்குட்டியோ
கழுதைக்குட்டியோ
முன்னாடி போனால் கடிக்கும்
பின்னாடி போனால் உதைக்கும்.
மக்களே! உசார்!

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (27-Mar-12, 12:00 pm)
பார்வை : 338

மேலே