இது குறள் அல்ல, என் குரல்!
கடவுள் வாழ்த்து-
இருக்கு என்பார் இல்லை என்பார் நம்மிடம்
இருக்கும் மனசாட்சியே கடவுள்.
வான்சிறப்பு-
எல்லாநாளும் மழை பெய்தால் நம்நாட்டில்
இல்லையே முல்லைப்பெரியாறு மோதல்.
நீத்தார்பெருமை-
தப்புதப்பாய் வாழ்வோரின் வழியில் சென்றால் என்றும்
தப்புதப்பாய் போகும் வாழ்க்கை.
அறன்வலியுறுத்தல்-
கரண்ட் இல்லை வேலை இல்லை பரவாயில்லை
கஞ்சி தொட்டியவது திறவுங்கள்.
அரசியல்-
அரியணைக்காலம் ஐந்து வருடம்தான் அதற்குள்
அனைத்தையும் கொள்ளை கொள்.