பாச பிரிவு 2 )

மாலை சூரியன்
தங்க தட்டு போல
தக தகவென் நகர்ந்து சென்றது
தங்கையை நினைவுபடுத்தியது !

நீ கூறிய வார்த்தையால் அல்லவா
கதிரவனுக்கே கண் சிவந்து
தங்க தகடு போல நகர்ந்து சென்ற
காரணம் எனக்கு மட்டும்மல்லவா தெரியும் !

நீ என்னை பிரிந்து செல்
எனக் கூற நான் என்ன
உன் நண்பனாகவா பழகினேன்- நான்
உன் சகோதரன் அல்லவா !

என் இருதயம் மட்டும் துடிக்கிறது
உயிர் எப்போதோ பிரிந்தது போல்
உன்னை பார்த்து அல்லவா - உன்போல்
கவிதை எழுத தொடங்கினேன் - அப்போது
உனக்காக கண்ணீர் வடிக்கிறேன் - இப்போது !

உன்னுடன் சண்டையிடும்
இதையத்தை வெறுத்து விடாதே
அவர்களை விட வேறு யாராலும்
உன்னை உண்மையாக
நேசிக்கவே முடியாது !

இந்த எழுத்துலகத்தில்
நுழையாதிருந்தால் - இப்போது
நீ யாரோ ? நான் யாரோ ?
நான் என் செய்வேன் !

சேர்ந்தோம் , பிர்நதோம்
மறப்போம் , மறைவோம்
பிறப்போம் , மறுபிறவியில்
ஒன்றாக இன்னைவோம் ,
இணை பிரியாத
சகோதர, சகோதிரியாக !

என்றும் அன்புடன் "நட்புக்காக"
இன்று மறுபடியும் "பாச பிரிவுக்காக"

எழுதியவர் : சேதுராமலிங்கம்.உ (28-Mar-12, 9:25 am)
பார்வை : 368

மேலே