காதலின் அடிப்படை
அன்பு சொரியும்
காதல்,
இறைவனின் கோட்டை.
உயிர் பொருத்தும்
காமம்,
அதன் கதவுகள்.
உயிர் கலத்தல்
இறை கலத்தல்
மறந்து,
அதனினைத் திறக்கக்கூட
முயலாமல் தட்டிவிட்டு
உயிரிழந்து
திரும்பிவிடுகின்றோம்.
உயிர் உருவாகும்
அந்தக்கோட்டையினை
சிந்திப்பதேயில்லை.
பெருங்கடலில் நீந்தத்தவித்து
மறுபடியும் மறுபடியும்,
செத்து மடிகின்றோம்.
அது இன்பத்தினுள்,
(உயிரினுள்)
இறத்தல் சம்பந்தப்பட்டது.