பலவீனங்கள்.
நன்மை மிகவே
வேண்டுமானால்..
உங்கள் பலவீனங்களை
பலவீனப்படுத்துங்கள்.
பலவீனங்களை,
பலமற்றதாக
எண்ணாதீர்கள்.
பலவீனங்கள்
நம்மை வீழ்த்தும்வரை
வீழாது வாழ்கின்றன.
பலவீனங்கள் வாழ்ந்தால்
நாம் வாழ்வதில்லை.
பலவீனங்கள்,
பலம்கொண்ட பயங்கரவாதிகள்.
அவைகளை முழுபலம் கொண்டு
முழுமையாக அழியுங்கள்.
பலவீனம் நீங்கினால்
பலம் நிறையும்.
நிறைந்த பலத்தால்,
விரைந்து பெருகும் நன்மைகள்.
பாலு குருசுவாமி.