என் நண்பனை போல் வருமா..?
ஆயிரம் உறவுகள் கூட இருந்தாலும்
அண்ணன் தம்பிகள் உடன் இருந்தாலும்..
அர்த்தம் புரியா என் வாழ்கையை
அணைத்து கூட்டிச்செல்ல
என் ஆருயிர் நண்பனைப்போல் வருமா...???
மையில்கள் பலத்தாண்டி நீ நின்றாலும்..
என் மனதெல்லாம் உன் வாசம் வீசுமடா...!
என்றும் என் இதயம் உன் நட்பை பேசுமடா..!!!
நான் இறந்தாலும் உனக்காக பிறக்கவேண்டும்..
உன்னை கைகோர்த்து என் வாழ்வை நகர்த்த வேண்டும்..!!!