தரணியை ஆளும் தலைவன்

தரணி தேடும்
தலைவன்
யார் அவன் !

தூரத்தில் நின்று
சோகங்களை ரசிப்பவனையா ,
துள்ளி எழுந்து
துன்பங்களை துடைப்பவனையா !

மனிதனாக பிறப்பான்
மிருகமாக வாழ்வான்
துளைந்து போன மனசாட்சி
அடிக்கடி அவனுக்கு
நியாபகப்படுத்தும்
அவன் மனிதனென்று !

படைத்த கடவுளைக்கூட
இளைக்காரம் செய்வான்
அவனுக்கும் கீழ் தான்
கடவுள் என்பான் ,
மிருகங்கள் கூட
மறந்ததில்லை
தாங்கள் மிருகம் என்பதை ,
ஆனால்
மனிதன் மறந்துவிட்டான்
தான் ஒரு மனிதன் என்பதை !

ஏழ்மையை இன்னும்
ஏழ்மை செய்வான்
இவன்வீட்டு பெட்டிகளில் மட்டும்
ஏகபோகமாய் குவிந்துகிடக்கும்
பொன்னும் பணமும் ,
வாழும்போது சேர்துவைத்ததை
போகும் போதும் கொண்டுசெல்வான்
"பாவ மூட்டைகளாய்" !

வாழந்தபோது கஞ்சனாய்
வாழந்தவன்
சாகும்போது சாக்கடையாய்
சாகிறான் ,
கண்டுகொள்ள ஆளில்லை ,
கவலைப்பட ஆளில்லை ,
கடைசியில் காட்டுக்கு கூடவரவும்
ஆளில்லை ,
பொட்டி, போட்டியை சேர்த்தவன்
கடைசியில்
போட்டிக்குள்ளே போகிறான்
நாலேநாலு வெட்டிப்பையன் கூடமட்டும் !

மனிதா பொருள் சேர்த்தது போதும்
இனியாவது கொஞ்சம் புண்ணியம் சேர்
நாளை உன்னுடன் வரும்
நாலு பேருடன்
கூடவே வரும் "புண்ணியமும் ",
தரணியை ஆண்டவரையில்
நீ மனிதன்
நாளை நீயும் ஒரு தெய்வம் !

எழுதியவர் : வினாயகமுருகன் (4-Apr-12, 3:55 pm)
பார்வை : 169

மேலே